திட்ட உணவு
திட்ட உணவு (உணவூட்டம்) Diet (Nutrition) என்பது எவ்வளவு உணவு மனிதன் அல்லது பிறவுயிாினங்கள் உட்கொள்கிறது என்பதைக் குறிக்கிறது. திட்ட உணவு எப்பொழுதும் எதை உணர்த்துகிறது என்றால், உடல்நலனிற்கு ஏற்ற குறிப்பிட்ட உணவூட்ட முறை அல்லது உடல் எடை குறைப்பதற்கான காரணங்களுக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இருந்த போதிலும் மனிதன் அனைத்துண்ணி வகையைச் சார்ந்தவன், ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கலாசாரத்தை பின்பற்றுபவனாக இருப்பதால் சில உணவு விருப்பத்தேர்வாகவும் அல்லது சில உணவிற்கு விலக்கும் அளிக்கப்படுகின்றன. முழு ஊட்டச்சத்து என்பது உயிர்ச்சத்துக்கள், தாது உப்புகள், முக்கியமான அமினோ அமிலங்கள் ஆகியவற்றை உட்கொள்ளல் மற்றும் உறிஞ்சிதல் ஆகும். புரதத்திலிருந்து அமினோ அமிலங்களும், கொழுப்புச்சத்துப் பொருட்களில் இருந்து முக்கியமான கொழுப்பு அமிலங்களும், மேலும் சக்தியளிக்கக் கூடிய உணவு மாவுச்சத்திலிருந்தும் கிடைக்கின்றன. திட்ட உணவுப் பழக்கமானது மனிதனின் வாழ்க்கைத் தரத்தையும், உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளையும் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.